https://www.box.com/s/e27gcsm9s23718u68z8y
My life moments
Sunday, September 2, 2018
Wednesday, September 20, 2017
Digital SR நிரப்பும் போது கவனிக்க வேண்டிய முக்கிய பக்கங்கள் என்ன?
Digital SR நிரப்பும் போது கவனிக்க வேண்டிய முக்கிய பக்கங்கள் என்ன?
IFHRMS DIGITIZATION BOOKLET பணிப்பதிவேட்டை பார்த்து நிரப்பவும்:
பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்
பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்
பக்கம்-7 துறை தேர்வு விவரம்
பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி
பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம்
பக்கம்-15-16 பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு விவரம்
பக்கம்-17 தற்காலிக/நிரந்தர பணி துறவு
பக்கம்-18-19 2003 வேலைநிறுத்தம் மூலம் தற்காலிக பணி நீக்க விவரம்
பக்கம்-21 ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு மாறுதல் நியமனம்
பக்கம்-25 ஈட்டிய விடுப்பு இன்றைய இருப்பு விவரம்
பக்கம்-26 மகப்பேறு விடுப்பு விவரம்
பக்கம்-27 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் மருத்துவ சான்றின் மருத்துவ விடுப்பு
பக்கம்-28-29பதவி உயர்வு மூலம் ஊதிய மறுநிர்ணயம் மட்டும்
பக்கம்-30-32 ஊதிய குழு நிர்ணயம்
பக்கம்-31-33 இடைக்கால நிவாரணம்
பக்கம்-34 இளையோர் மூத்தோர் ஊதிய விவரம்
பக்கம்-35-44 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-45 ஊக்க ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-46 தேர்வு/ சிறப்பு நிலை ஊதியம்
பக்கம்-47 உயர் கல்விக்கான துறை அனுமதி
பக்கம்-55-58 வாரிசு நியமன விவரம்
பக்கம்-61 பணி சரிபார்ப்பு
விவரம்
ஓ.மு L.Dis
மூ.மு K.Dis
ப.மு D.Dis
நி.மு R.Dis
செமுஆ Proc
ந.க R.C
அரசாணை G.O
இரு Standing Order No.
Sunday, September 3, 2017
,வறியவர்களின் பசியைப் போக்குங்கள்
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.
“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
படித்ததும் பதிந்தேன்.
Tuesday, August 15, 2017
Important G.O.
📙📘📕📗📓📒📙📘📕📗
Important GO Details
அரசானைகள் GO'S:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
1.G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
2.G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்
3.G.O.No. 123 Dt : may 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை
4.G.O.No. 178 Dt : July 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை
5.G.O.No. 270 Dt : July 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்
6.G.O.No. 264Dt : July 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை
7.G.O.No. 243 Dt : June 29, 2012
புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்
8.G.O.No. 96 Dt : June 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்
9.G.O.No. 140 Dt : June 11, 2012
2012 - 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012
10.G.O.No. 133 Dt : June 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012
11.G.O.No. 203 Dt : June 8, 2012
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government - Interest rates for the year 2012-2013 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்
12.G.O.No. 123 Dt : may 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்
13.G.O.(Ms).No.139 Dated: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139
14.G.O.(Ms).No.56 Dated: 24.4.2012.
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education
15.Lr No 35574 Dated: 23.4.2012.
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification
16.G.O Ms. No. 20309/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் -
17. G.O Ms. No. 21223/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :
18.G.O Ms. No. 193 02/12/2011
2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக
19.G.O Ms. No. 190 29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.
20. G.O Ms. No. 325 28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்-
21.GO MS No-325 Dated the 28/11/2011Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO - FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION
22.G.O Ms. No. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011
23.G.O Ms. No. 175 08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011
24.G.O Ms. No. 29421-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011
25.G.O Ms. No. 994 20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011
26.G.O Ms. No. 273 03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை
27.G.O Ms. No. 141 13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் - தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011
28.G.O Ms. No. 141 13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்
29.G.O Ms. No. 112 28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை
30.G.O Ms. No. 51 16-06-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள் amendment
31.G.O Ms. No. 51 16-05-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள்
32.G.O Ms. No. 58 February 25, 2011
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை
33.GO No23 dated:12 –01—2011
Revised Fixation of pay for teachers –2010வருட அரசாணைகள்
34.Letter No.63305 dated: 08 –11—2010.
Fixation of pay of employees in the Selection Grade / Special Grade –
35.G.o No 391 dt 7/10/2010
மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை
36.G.o No 240 dt 18/8/2010
மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்
37.GO.MS.NO-270 Dated-26-08-2010
implementation of one man commision
38.GoMs.No 116 Dt 18/08/2010Openuniversity-pg degree not valid for Govt.service
39.Go.no175Dt18/06/2010Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS
40.Go ms no 157 Dt.10-06-2010
30 upgraded Hr.Sec.School List41.GO No 128 Dt 05/07/201010 day ALM training-reg
42.GO.MS.NO-154 Dated-10/06/2010
Upgraded Hr.Sec.School list 2010
43.GO.MS.NO-143 Dated-21/05/2010
Upgraded Hr.Sec.School list 2010
44.GO.NO-131 Dated-28/04/2010
ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -11
45.GO No 96 Dt 22-03-2010temporary Post Continuation Order -2007-2009 upgraded schools-order issued up to 30/06/20112009வருட அரசாணைகள்
46.GO No.445 dated: 10–09—2009.
House Building Advance - Rate of interestLr No.29593 dated: 25–08—2009.இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்
47.Letter No.38561 dated: 16 –11—2009.
B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry2007வருட அரசாணைகள்
48.Lr NO 356 Dated: 2-11-2007
முன் அனுமதியின்றி எம்.பில் முடித்தமைக்கு பின் ஏற்பு
49.Go NO 31 Dated: 06-02-2007
அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.2006வருட அரசாணைகள்
50.GO NO 120 Dated: 18-07-2006
1-1-2006 முதல் தகுதிகாண் பருவம் துவங்குதல் குறித்து ஆணை
51.GO NO 99 Dated: 27-06-2006
1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்
52.GO NO 73 Dated: 23-06-2006
வேலை நிறுத்த காலம்-பணிக்காலமாக வரன்முரைபடுத்தும் ஆணை
53.GO NO 73 Dated: 17-11-2006
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணைDOWNLOADS2006 க்கு முந்தைய அரசாணைகள்
54.GO Ms No.11 dated: 09–02—2004.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெரும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை
55.G.O.No.1144 Dt : dec 13, 1993
பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசுவிடுமுறைவிட்டாலும் பள்ளிவேளைனாட்களில் குறைவு ஏற்ப்படகூடாது என்பதர்க்கானா அரசு ஆணை
56.GO Ms No.71 dated: 06–06—2002.
B.Sc(Bio-Chemistry) With B.Ed Physical science Eligible for B.T Science
57.GO Ms No.504 dated: 02 –11—2000.
Special Provident fund Scheme -2000 –click hereSpecial Provident fund Scheme -2000 rules
DOWNLOADTamilnadu education rules
58.GO.MS.NO-164 Dated-21/08/2000
M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
துருக்கி நாட்டுக் கதை
*துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .*
துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.
அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.
அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘
‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.
அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.
இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.
அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.
‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.
அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.
‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.
‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?
உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.
ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.
*நெசவாளி மேலும் சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.
ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’
*ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.*
*ஒரு தேசத்தை நிர்வாகம் செய்வதற்கு இப்படியானவர்களே தேவை என்று முடிவு செய்த அரசன், அந்த நெசவாளியைத் தனது நாட்டின் மந்திரியாக நியமித்தான் . . .*👌👍
Lesson plan
*கணித பாட திட்ட குறிப்பு : (கணிதம் )*
🔹வகுப்பு :
🔸பாடம் :
🔹கருப்பொருள் (Theme) :
🔸உட்பொருள் (sub theme) :
🔹தலைப்பு :
🔸முக்கிய கருத்துகள் :
🔹முன்னறிவு :
🔸கருத்துரு வரைபடம் :
🔹ஆசிரியர் செயல்பாடு : (அறிமுகம் / ஆர்வமூட்டல் / வரையறை / கணக்குகள் )
🔸மாணவர் செயல்பாடுகள் : (மாணவர் தீர் கணக்குகள்)
🔹வலுவூட்டல் / குறைத் தீர் கற்றல் / செறிவூட்டல் :
🔸கற்றல் மாதிரிகள் (modeling):
🔹குழுச் செயல்பாடு :
🔸மதிப்பீடு : LOT/MOT/HOT/VATQ
🔹செயல் திட்டம் :
TET & TNPSC பாடக்குறிப்புகள்
TNPSC & TET 👇
ஆங்கில பாடக்குறிப்புகள் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9aDBKYW9iVU1mY3c
கணிதம் - பாடக்குறிப்புகள் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9RTZBblJhT1FVSVU
அறிவியல் - பாடக்குறிப்புகள் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9VjN3M01PZFZFYms
தமிழ் பாடக்குறிப்புகள் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9SU1VTmlhTXYwUFE
சமூக அறிவியல் பாடக்குறிப்புகள் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9SjU5amhkbzhNUTg
TNPSC முழு புத்தகம் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9cm1BTi03VC1laEU
TNTET 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9LWdqbVdXdUhkN0U
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9dll4c1NsbnYzbmc
வங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள் 👇
https://drive.google.com/drive/folders/0BwphkgT5-PK9ZlJwTWNWN3RWNE0
🎉🎉🎉🎉🎉🎉🎉